அன்பிற்கினிய மிச்சிகன் தமிழ்த் தோழமைகளுக்கு என் இனிய வணக்கம்!
நம் அனைவரினுள்ளே தனித்துவமான திறமைகளென்று ஏதேனும் சில திறமைகள் நிச்சயமாகப் புதைந்து இருக்கும். அதே சமயத்தில் அவற்றை வெளி உலகிற்கு எடுத்துக்காட்ட நம்முள்ளே சிறிது தயக்கமும் இருக்கும். அந்தத் தயக்கத்தைப் போக்கிப் தங்களது படைப்பாற்றலை வெளிக்கொணர ஏற்படுத்தப்பட்ட தக்கதொரு பாலமே நமது மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் காலாண்டு இதழான கதம்பம்.
உங்களின் மேலான திறமைகளைப் படைப்புகளாக்கி அனுப்புங்கள். அவற்றை அச்சிலேற்றி அனைவரையும் சென்றடையுமாறு வகை செய்யக் காத்திருக்கிறோம்.
படைப்புகள் பற்றி:
1. சிறுவர் மற்றும் பெரியவர்கள் கதை (பத்து வினாடிக் கதைகள், நிமிடக் கதைகள், சிறுகதைகள்), கவிதைகள், கட்டுரைகள், ஓவியங்கள், கோலங்கள், பயணங்கள், புதிர்கள், நகைச்சுவைகள், சாதனைகள், அறிவியல் மற்றும் சமையல் சார்ந்த தமிழ்ப் படைப்புகள் அனைத்தும் வரவேற்கப்படுகின்றன.
2. நமது தமிழ்ப்பள்ளிகள் மற்றும் தமிழ்ச்சங்க நிகழ்வுகளை மேலும் வண்ணமயமாக்க நிகழ்ச்சிகளைக் கட்டுரை வடிவில் பதிவிட்டு அனுப்பினால் கதம்பத்தில் இடம்பெறச் செய்து அவை என்றும் நம் நினைவுகளின் சான்றாகத் திகழும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
படைப்பாளர்களின் முக்கிய கவனத்திற்கான குறிப்புகள்:
            1. படைப்புகள் தமிழில் இருக்கவேண்டும்.
            2. படைப்புகள் Microsoft Word or Google Docx தட்டச்சு செய்திருத்தல் அவசியம்.
            3. பொருத்தமான தலைப்புடன் படைப்பாளியின் முழுப்பெயர், வசிப்பிடம், அலைபேசி எண், புகைப்படம், அவர்தம் பற்றிய சிறிய அறிமுகம் இருத்தல் நலம்.
            4. மதம், ஜாதி, இனம், நிறம் மற்றும் அரசியல் சாயங்கள் தவிர்த்து மற்றவர்களின் உணர்ச்சியைப் பாதிக்காதவாறு இருக்கும் படைப்புகள் வரவேற்கப்படுகின்றனடும்.
            5. மிச்சிகன் தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் படைப்புகளாக இருத்தல் நலம்.
            6. ஓவியம் வரைந்து அனுப்புபவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்: ஓவியங்கள் நீளவாக்கில் (landscape) வரைந்து வண்ணம் தீட்டியதாக இருத்தல் வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி(Email) :kadhambam@mitamilsangam.org
படைப்பினை அனுப்பிய பின்னர் அது கிடைத்ததற்கான பதில் வரவில்லையெனில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள kadhambam@mitamilsangam.org என்ற மின்னஞ்சலில் என்னைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மிக்க நன்றி!
உங்கள் கதம்பம் ஆசிரியர்
மீனா முருகன்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம்.
குறிப்பு: படைப்புகள் அச்சிடுவதற்கு உகந்தனவா என்று முடிவு செய்யும் உரிமை இதழாசிரியருக்கு