Michigan Tamil Sangam











Editors Page

அன்புடையீர்,

வணக்கம்!

உலகம் விளக்கமுற கீழ்த்திசையில்

மலருது செங்கதிர்;

தமிழ் மொழி சிறக்க மேல்திசையில்

மலருது கதம்பம் இதழ்!

பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ் மொழியில் பெயர்க்கவும்,

இறவாத புகழுடைய புது நூல்கள்

தமிழ் மொழியில் இயற்றவும்,

தளமமைக்கிறது நம் கதம்பம் இதழ்!

கலை ஆர்வமெனும் நல்லரும்பை,

தமிழெனும் சரங்கொண்டு தொடுத்தனுப்புவீர் - அது

கதம்பம் எனும் இதழ் வடிவாய்

திசையெட்டும் மலரட்டும்!தமிழ் மணம் பரப்பட்டும்!!

உங்களின் படைப்பு… கதம்பத்தின் சிறப்பு…


படைப்புகள் பற்றி:

1. கதை, கவிதை, கட்டுரை எழுத ஆர்வமுள்ளவர்கள் தங்கள்

படைப்புக்களை அனுப்பலாம்.

2. தங்களின் குழந்தைகளின் எழுத்துக்களில் அமைந்த செய்திகள்

அல்லது அவர்கள் வரைந்த ஓவியங்கள் அனுப்பலாம் அல்லது அவர்களின்

கற்பனையால் உருவான குட்டிக் கதைகள் அனுப்பலாம். படைப்புகள்

குழந்தைகள் பற்றியதாக அமைந்திருத்தல் நன்று.

3. கதம்பதில் உங்களுக்கு பிடித்த பகுதியையும் அதைப்பற்றிய கருத்துகளையும்

எங்களுக்கு எழுதி அனுப்பலாம்.

4. பாரம்பரிய சமையல் ஆரோக்கிய சமையல் பற்றி எழுதி அனுப்பலாம்.

5. அறிவியல் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

6. தமிழ்ப்பள்ளிகளின் நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்களின்

படைப்புகளை பள்ளி ஒருங்கிணைப்பாளர் வழியாகவோ அல்லது

நேரடியாகவோ அனுப்பி வைக்கலாம்.

7. மிச்சிகன் தமிழ் சங்கம் நடத்தும் நிகழ்ச்சியைப் பற்றிய படைப்புகள் கவிதை

கட்டுரை எதுவாகினும் எழுதி அனுப்பலாம்



படைப்பாசிரியர்கள் பின்பற்ற வேண்டியவை :

1. படைப்புகள் தமிழில் இருக்கவேண்டும்.

2. Microsoft Wordல் இருக்கவேண்டும்.

3. சரியான தலைப்பு வேண்டும்.

4. ஆசிரியர் பெயர், புகைப்படம், ஆசிரியர் பற்றிய சிறு அறிமுகம்

வேண்டும் .

5. இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

6. மதம், ஜாதி, இனம், நிறம், முதலியன தவிர்த்து மற்றவர்களின்

உணர்ச்சியைப்பாதிக்காத படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

7.மிச்சிகன் பகுதியில் உள்ளவர்களது படைப்பாக இருக்கவேண்டும்.

8.தமிழ்ச்சங்க உறுப்பினர்களின் படைப்புகளாக இருத்தல் நல்லது.


படங்கள்/ஓவியம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்:

1.படங்கள் Line drawing மேல் வண்ணம் மட்டும் தீட்டியதாக இல்லாமல்,

முழுவதும் சொந்தமாக வரைந்ததாக இருக்கவேண்டும்.

2.எல்லா படமும் landscape ல் (படுத்தவாக்கில்) இருக்கவேண்டும்.



படைப்புகளை அனுப்பும்போது தங்கள் தொலைபேசி எண்ணைக்

குறிப்பிடவும். தங்கள் படைப்பினை அனுப்பிய பின் அது கிடைத்ததற்கான

பதில் வரவில்லையெனில் உடனே இதழாசிரியரை 248-571-3904 என்ற

தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.(குறிப்பு: படைப்புக்கள்

அச்சிடுவதற்கு உகந்தனவா என்று முடிவு செய்யும் உரிமை

இதழாசிரியாருக்கு உண்டு)


படைப்புகளை அனுப்புவதற்கு கடைசி நாள் (Last Date) : செப்டம்பர் 15,2018

மின்னஞ்சல் முகவரி(Email) : kalaiarasy.mts.2018@gmail.com


நன்றியுடன்,

திருமதி: கலையரசி சிவசுந்தரபாண்டியன்

கதம்பம் இதழ் ஆசிரியர் 2018-19

மிச்சிகன் தமிழ்ச் சங்கம்.


தமிழா விழி! தமிழே நம் விழி!!

Kalaiarasy Sivasundarapandian, Kadhambam Editor kalaiarasy.mts.2018@gmail.com











Connect with Us

Our Sponsors