Michigan Tamil Sangam











Editors Page

அன்புடையீர்,

வணக்கம்!

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவ !

வெள்ளப் பெருக்கென கதையும் கவியும் பெருக !

இறவாத புகழுடைய புதுப்படைப்புக்களை அடுக்கி

அழகுற நம் கதம்பத்தை தொடுக்கலாம் வாரீர்!

உங்கள் நினைவுப் பெட்டகத்தில் தவறாமல் இடம் பெரும் உங்கள்

கதம்பம், தன்னை செதுக்கி செதுக்கி துடிப்போடு வடிவமைத்துக்

கொண்டுள்ளது. மேலும் பொலிவு பெற உங்கள் அனைவரின்

ஆதரவை வேண்டுவதோடு உங்கள் படைப்புக்களை அனுப்ப

வேண்டுகிறேன்.

கதம்பம் எப்பொழுதும் உங்கள் பக்கத்தில்,

இனி நீங்கள் கதம்பம் பக்கங்களில்....


படைப்புகள் பற்றி:

1 . கதை, கவிதை, கட்டுரை எழுத ஆர்வமுள்ளவர்கள் தங்கள்

படைப்புக்களை அனுப்பலாம்.

2.தங்களின் குழந்தைகளின் எழுத்துக்களில் அமைந்த செய்திகள்

அல்லது அவர்கள் வரைந்த ஓவியங்கள் அனுப்பலாம்.படைப்புகள்

குழந்தைகள் பற்றியதாக அமைந்திருத்தல் நன்று.

3.தமிழ்ப்பள்ளிகளின் நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்களின்

படைப்புகளை பள்ளி ஒருங்கிணைப்பாளர் வழியாகவோ அல்லது

நேரடியாகவோ அனுப்பி வைக்கலாம்.



படைப்பாசிரியர்கள் பின்பற்ற வேண்டியவை :

1.தமிழில் இருக்கவேண்டும்.

2.Microsoft Wordல் இருக்கவேண்டும்.

3.தலைப்பு வேண்டும்.

4.ஆசிரியர் பெயர், புகைப்படம், ஆசிரியர் பற்றிய சிறு அறிமுகம்

வேண்டும் .

5.இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் வேண்டும்.

6.மதம், ஜாதி, இனம், நிறம், முதலிய பிறரை தாக்கத்துக்குள்ளாக்கும்

கருத்துக்களைத் தவிர்க்கவேண்டும்.

7.மிச்சிகன் பகுதியில் உள்ளவர்களது படைப்பாக இருக்கவேண்டும்.

8.தமிழ்ச்சங்க உறுப்பினர்களின் படைப்புகளாக இருத்தல் நல்லது.


படங்கள்/ஓவியம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்:

1.படங்கள் Line drawing மேல் வண்ணம் மட்டும் தீட்டியதாக இல்லாமல்,

முழுவதும் சொந்தமாக வரைந்ததாக இருக்கவேண்டும்.

2.எல்லா படமும் landscape ல் (படுத்தவாக்கில்) இருக்கவேண்டும்.



படைப்புகளை அனுப்பும்போது தங்கள் தொலைபேசி எண்ணைக்

குறிப்பிடவும். தங்கள் படைப்பினை அனுப்பிய பின் அது கிடைத்ததற்கான

பதில் வரவில்லையெனில் உடனே இதழாசிரியரை 586-303-6217என்ற

தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.(குறிப்பு: படைப்புக்கள்

அச்சிடுவதற்கு உகந்தனவா என்று முடிவு செய்யும் உரிமை

இதழாசிரியாருக்கு உண்டு)


படைப்புகளை அனுப்புவதற்கு கடைசி நாள் (Last Date) : செப்டம்பர்15,2017

மின்னஞ்சல் முகவரி(Email) : abi.mts2011@gmail.com


நன்றியுடன்,

திருமதி: அபிராமி சுவாமிநாதன்

கதம்பம் இதழ் ஆசிரியர் 2017-18

தமிழ்ச்சங்கம் மிச்சிகன்


தமிழரிடத்தில் தமிழில் பேசுவோம்!!!

Abirami Swaminathan, Kadhambam Editor abi.mts2011@gmail.com











Connect with Us

Our Sponsors